Tuesday, January 20, 2009

புத்தாண்டு வாழ்த்துக்கள்

என் நண்பர்களுக்கு நான் அனுப்பிய புத்தாண்டு வாழ்த்தையே என் முதல் பத்திவாக பதிவு செய்கிறேன் ... இதே உற்சாகம் தொடர்ந்தால் அடுத்தடுத்து எழுத ஆயத்தமாவேன்.... இதோ புத்தாண்டு மடல்..


பாலஸ்தீனிய பிஞ்சுகள் கருகுவது நிக்கப்போவதில்லை
ஈராக்கிய மண்ணில் இரத்தத்தின் ஈரம் காயப்போவதில்லை
அமெரிக்காவின் அடாவடி அடங்கப்போவதில்லை

நம் சாலையோர பிச்சைகாரிகள் குழந்தை ஏந்துவதை நிறுத்தப்போவதில்லை
பெண்களுக்கோ பெண்ணியதுக்கோ பாதுகாப்பு கிடைக்கப்போவதில்லை
சாதி அரசியல் ஓயப்போவதில்லை
மதச்சண்டைகள் மாயப்போவதில்லை
உறை சார்ந்த நோய்கள் ஒழியப்போவதில்லை

சாலையோர இந்தியர்களுக்கு உறைவிடம் கிடைக்கப்போவதில்லை
அவரை நம் சகோதரர் என்று 'காகிதத்தில்' மட்டும் சொல்வதை நாம் நிறுத்தப்போவதில்லை

இவை யாவையும் நாம் வழக்கம்போல கண்டுகொள்ளப்போவதில்லை
முதல் வாரம் முழுமையும் கடைபிக்க முடியாத புத்தாண்டு சபதங்கள் எடுக்காமல் இருக்கப்போவதில்லை

நாம் என்று மாற துணிகிறோமோ அன்று தான் நமக்கு புத்தாண்டு பிறக்கும்.
'அந்த' புத்தாண்டு பிறக்க வாழ்த்துகிறேன் .... அர்த்தம் இல்லாத 'இந்த' புத்தாண்டு வாழ்த்துக்களை ஒதுக்குகிறேன்

4 comments:

  1. நல்லா சொல்லியிருக்கிங்க.. இருந்தாலும் அதையே நினைச்சு நம்ம வாழ்க்கைய தொலைக்க யார் முன்வருவா? புத்தாண்டு என்பது கொண்டாட்டத்திற்கு ஒரு காரணம் அவ்வளவே

    ReplyDelete
  2. உங்கள் கருத்துக்கு நன்றி!!!
    தேவா.

    ReplyDelete
  3. stumbled on your profile from your comment on "Cable" shankar's review on Perfume movie..

    உங்க ப்ரோபைலில் குறிப்பிட்டிருந்த உங்கள் தொழிலின் விவரிப்பு சுவாரசியமாய் இருக்கு.... உங்கள் அனுபவங்களை இதில் பகிர்ந்துகொண்டால் மிகவும் பயனுள்ளதாயும் சுவாரசியமானதையும் இருக்குமே ...

    ReplyDelete
  4. யார்த்ரீகன் ,
    கண்டிப்பாக விரைவில் எழுதுகிறேன்.... உலக பொருளாதர பின்னடைவு எனக்கு அன்பளிப்பாக அளித்த ஓய்வு நேரம் என் எழுத்துக்களை வளப்படுத்த உபயோகப்படுத்தலாம் என்று எண்ணியிருக்கிறேன்.

    ReplyDelete