குடியேற்ற அலுவலர் என்னிடம் எதோ ஹிந்தியில் கேக்கிறார் ... மருந்துக்குகூட ஹிந்தி தெரியாத நான் அவரை ஆங்கிலத்தில் பேசுமாறு விழைந்தேன்.. சற்றும் எதிர்பார்க்காத முறையில் இருந்தது அவருடைய பதில்... " நீ இந்தியன் தானே .. இந்தியாவில் தானே பொறந்தே .. அப்புறம் ஏன் ஹிந்தியில் பேச மாட்டேன் என்கிறாய்.." ஏன் மேல் எரிந்து விழுந்தவர்.. என்னை அரை மணி நேரம் அங்கே நிக்கவைத்து பாடாய் படுத்தினார்... ஹிந்தியில் பேசாததை குற்றமாக எண்ணுகிறார் அவர்... வாழ்க தமிழ் என்று நடையை கட்டினேன்..
இடம் : சென்னை விமான நிலையம்
இங்கு வேறு ஒரு குடியேற்ற அலுவலர் என்னிடம் தமிழில் பேசுகிறார்.. " எங்க போறே? ஏன் போறே? ..." ஐந்து நிமிடங்கள் துளைக்கும் கேள்விகளாக வருகிறது.. நானும் சளைக்காமல் தமிழிலே பதில் சொல்கிறேன்.. கடைசியில் ஊருக்கு திரும்ப வருவதற்கான பயண சீட்டை கேட்டார்.. கொடுத்தேன். பிறகும் கேள்விகள் தொடர்ந்தன.. " எப்ப திரும்ப வர்றே? " பொறுத்தது போதும் பொங்கி எழுன்னு மனசுக்குள் மனோகரா வசனம் ஓட .. நான் திரும்ப சொன்னேன் " every single details are with you and I dont know why you are asking all these questions" இதை கேட்ட மாத்திரத்தில் பாஸ்போர்ட்டில் முத்திரை பதித்து என்னை விட்டுவிட்டார்.. என்ன கொடுமை இது.. ஒரு வரி ஆங்கிலத்தில் பேசினால்தான் எங்களை நம்புவீர்களோ??? இதுக்கு அந்த ஹிந்திவாலா மேல் !!! வாழ்க தமிழ் !!!
இது ஒரு சோறுதான் .. எப்படி பானை பானையாக இருக்கிறது நம்மூரில்.. யோ தமிழனை தமிழன் மதிக்கலேனா வேறு யாருதான்யா மதிப்பான்?
எங்காவது சென்று தமிழில் விசாரித்தால் "ஓராம நில்லு" என்றும் கொஞ்சம் மரியாதை உள்ளவர்கள் " கொஞ்சம் வெயிட் பண்ணுங்க " ன்னும் சொல்வாங்க .. அதே ஆங்கிலத்தில் கேட்டாலோ .. கேட்டமாத்திரத்தில் பதிலும் கிடைத்துவிடும்.. கூடவே "சார்" போட்டும் பேசுகிறார்கள்...
ஏன் அனுபவத்தில் தாய்மொழியை பேச கூச்சப்படும் ஒரே சமுதாயம் நாமதான்யா.. தமிழன்னு சொன்ன தலை குனிந்துதான் நிக்கிறான்.. கலைஞர் சொன்னது போல...
"இவர்கள் தமிழை அறிந்து கொள்ளவில்லை .. அரிந்து கொல்கிறார்கள்" வாழ்க தமிழ் !!!!
எஸ் ஐ அக்ரீ.
ReplyDeleteஇட் ஹேப்பண்ட் மோஸ்ட் ஆஃப் த டைம்.
எனக்கும் இந்த சந்தேகம் ரொம்ப
ReplyDeleteநாளாக உள்ளது நண்பரே!
இந்தியன் இந்தி மட்டும்தான் பேசனுமா??
தமிழன் தமிழ் பேசுவான்!
(தமிழன் தமிழ் பேசுனாலும்.!ம்க்கும்.)
தெரியலைன்னா உலகமொழி ஆங்கிலம் பேசுவான்!
இவிங்களுக்கு என்ன?
இவிங்களுக்கு ஆங்கிலம் தெரியலைன்னா நாமளா பொறுப்பு!
எனக்கும் இந்தியும் பிடிக்கும்!
ஒரு மொழியாக இந்தியையும் தெரிந்து வைத்துக் கொள்ளலாமே தவிர
இந்தி பேசுனாதான் இந்தியன்-கிறதெல்லாம் ரொம்ப டூ மச்!!