Friday, March 27, 2009

விமான நிலைய அவலம்

இது தற்செயலாக நடந்ததா என்று தெரியவில்லை. ஆனால் அரசு இயந்திரம் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று. இன்றைய தீவிரவாதிகள் சைக்கிள் கேப்பில் கப்பல விடுவார்கள்... ஆனால் சென்னை விமான நிலையத்தில் நேற்று நான் கண்ட காட்சிகள் சொல்வது அங்கு ஒரு கப்பல் கேப்பே இருக்கு என்பதைத்தான்..

தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக ஐந்து அடுக்கு பாதுகாப்பு சென்னை விமான நிலையத்துக்கு...அத்தனை அடுக்கும் சீட்டுக்கட்டாக அல்லவே இருக்கிறது. தீவிரவாத அச்சுறுத்தல் இல்லாத காலங்களில் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்புக்கு அதிகாரிகள் கவனமுடன் செயல்பட்டார்கள் என்பது என் கருத்து. நேற்று நடந்தது என்னவென்பதை கீழே படியுங்கள்...

விமான நிலையத்தின் நுழைவாயிலில் இரண்டு காவலர்கள் நின்று நம்மிடம் டிக்கெட் இருக்கிறதா என்று பார்ப்பார்கள். அவர்களை விட்டுவிடலாம்... உள்ளே சென்றால் நமது luggage ஐ X-Ray பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள் , அப்பொழுது நமது பொருட்கள் ஒரு இயந்திரத்தின் வழியாக செல்லும் போது அதன் நகல் படத்தை இரண்டு காவலர்கள் இருந்து கண்காணிப்பார்கள். சந்தேகத்திக்கு உள்ளான பைகளை திறந்து சோதனையும் நடத்துவார்.. ஆனால் நேற்று அவ்விடங்களில் இருந்த இரு இளம் காவலர்கள் கண்காணிப்பு திரையை விட்டுவிட்டு சிட்டுகள் சிலதை பார்த்து சைட் அடித்துக்கொண்டிருந்தார்கள் ... என் பொருட்களை அவர்கள் கண்காணிக்காமல் இருப்பதை நான் கண்கானித்துக்கொண்டிருந்தேன். மனதுக்குள் சின்ன சங்கடத்துடன் அவ்விடத்தை விட்டு நீங்கி பொருட்களை check in செய்துவிட்டு கைப்பையை மட்டும் எடுத்து முன்னேறினேன்.. விமானத்தில் ஏறும் முன்பு மீண்டு ஒருமுறை நமது கைப்பையை X-Ray சோதனைக்கு உள்ளாக்குவார்கள்..அதும் முடிந்தது (இங்கு என்ன நடந்தது என்று கடைசியில் சொல்கிறேன்)

அடுத்தபடியாக விமானத்தில் ஏறி அமரும்முன் நமது கைப்பை சோதனை செய்யப்பட்டதின் சான்றை (சீல்) பார்க்க ஒரு காவலர் இருப்பார்.. அவர் என் கைப்பையை மட்டுமல்ல யாருடைய கைப்பையையும் பார்க்கவில்லை.. வழக்கம்போல் நொந்துகொண்டு விமானம் ஏறி வந்து சேர்ந்தேன்..வழியெல்லாம் இந்த சோதனை குளறுபடிகள் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.. இவ்வளவு நடந்தும் ஏன் இப்படி அலட்சியமாக இருக்கிறார்கள் என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்... இதையே யோசித்து பலனில்லை என்று வந்த வேலையே பார்க்கலாம் என்று என்று என் கைப்பையை திறந்தால் அதில் நான் மறந்து வைத்திருந்த கூர்மையான "கத்தரிக்கோல்" (முக்கியமான சோதனையான " கைபை எக்ஸ்ரே" வில் இதை கவனிக்கவில்லை நம் காவலர்கள்)...

ஒருகணம் என்னை ஒரு தீவிராதி நிலையில் நிக்கவைத்து சிந்தித்துப்பார்த்தேன்.. நாசங்களை விதைக்க இதை விட யார் வழி விட்டுக்கொடுப்பார்... எனவே இதை கண்டிப்பாக பதிவிட வேண்டும் என்று எண்ணி இப்பொழுது நாடு ராத்திரியில் உக்காந்து எழுதுகிறேன்.. இது மிகவும் அவசியம் என்பதால் அவசரகதியிலேயே எழுதுகிறேன்..தவறுகள் எழுத்துபிழைகளை மன்னிக்கவும்..

என் கருத்துப்படி விமான பாதுகாவலர்கள் தினமும் ஒரே வேலையே பார்ப்பதால் கவனக்குறைவு ஏற்படலாம்.. அதானால் இப்பணிக்கு குறுகிய கால அடிப்படையில் காவலர்களை மாற்றிக்கொண்டே இருக்கலாமே!

10 comments:

 1. போச்சுடா! இப்படியெல்லாம் நடக்குதா?
  அங்கு இருப்பவர் யார் கண்ணிலாவது இப்பதிவு பட்டு சரி செய்யப்பட்டால் நல்லது.

  ReplyDelete
 2. ஆனால் நேற்று அவ்விடங்களில் இருந்த இரு இளம் காவலர்கள் கண்காணிப்பு திரையை விட்டுவிட்டு சிட்டுகள் சிலதை பார்த்து சைட் அடித்துக்கொண்டிருந்தார்கள் ... என் பொருட்களை அவர்கள் கண்காணிக்காமல் இருப்பதை நான் கண்கானித்துக்கொண்டிருந்தேன்///

  ஒரு அஜாக்கிறதைதான்!!

  ReplyDelete
 3. ஒருகணம் என்னை ஒரு தீவிராதி நிலையில் நிக்கவைத்து சிந்தித்துப்பார்த்தேன்.. நாசங்களை விதைக்க இதை விட யார் வழி விட்டுக்கொடுப்பார்... எனவே இதை கண்டிப்பாக பதிவிட வேண்டும் என்று எண்ணி இப்பொழுது நாடு ராத்திரியில் உக்காந்து எழுதுகிறேன்.. இது மிகவும் அவசியம் என்பதால் அவசரகதியிலேயே எழுதுகிறேன்..தவறுகள் எழுத்துபிழைகளை மன்னிக்கவும்..

  என் கருத்துப்படி விமான பாதுகாவலர்கள் தினமும் ஒரே வேலையே பார்ப்பதால் கவனக்குறைவு ஏற்படலாம்.. அதானால் இப்பணிக்கு குறுகிய கால அடிப்படையில் காவலர்களை மாற்றிக்கொண்டே இருக்கலாமே!///

  நல்ல எச்சரிக்கையான பதிவு!

  ReplyDelete
 4. அன்பின் அதிலை,

  புத்தகப்பட்டியல் போட்டிக்கான பரிசினை அனுப்பி வைக்க தங்களது முகவரி தேவைப்படுகிறது. என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது முகவரியை அனுப்பி வைத்தால் தன்யனாவேன்.

  மிக்க அன்புடன்,
  செல்வேந்திரன்.
  k.selventhiran@gmail.com

  ReplyDelete
 5. ஹூம்! கவலையாகத்தான் இருக்கு.
  அடிக்கடி இவர்களை சுழல் முறையில் வேலை பார்க்க வைத்தால் கொஞ்சம் போர் அடிக்காமல் இருக்கும்.

  ReplyDelete
 6. சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!

  ReplyDelete
 7. nandru. iranadam checkj in la enna nadanthuchunu solla maranthteena..

  MUKKIAYAMAANA MATTER..

  NAAN CHENNAI AIRPORT LA IRUNTHU KILAMBUMBOTHU IPPADI THHAAN AJAKIRATHAAI.

  NAMMA AALNGA PORAVANGALA KANDUKKA MAATANGA.. BUT RETURN AGURAPPA PAARUNGA.. KOLAIKAARAN PAARKURA MATHIR PAARPAAANGA.. ABORAD LA RIUNTHU VARRA THINGS YETHAYAVATHU SURUTALAMNU KALUGU MATHIRI PAARPAANGA. PICHAI EDUKKAMA IRUKURATHUKKAGA .. INTHA VALI VIANGALUKKU. NEENGA CHENNA IAIRPORT KU RETUNR AAGURAPPALM GAVNIANGA.. CHUMMA SHOULDERA THOOKIKITTU KELVI MELA KELVI KETU ERICHAL PANNUNGAVNUNGA

  IVANUGALUKKU PAATHUGAAPULA LAM AKKARAI ILLA.. VARRAVANGKITTA ENNA PUDINGALAMNU THAAN AKKARI

  ReplyDelete
 8. MATRUM ENATU BLOG PILAYAY THIRUTHIYATHARKKU NANDRI

  http://vallinamguna.blogspot.com/

  ReplyDelete
 9. ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகி .. இப்போதுதான் இந்த வலைப்பூ வை தொடருப்படி அமைத்து உள்ளேன் . இதுவரை சுமார் ஐம்பது போஸ்ட் களை செய்த பிறகு இப்போதுதான் இதை ஆரமிப்து இருக்கிறேன்..


  ஏற்கனவே வருகை தந்தவர்களும் , புதிதாக வருகை தருபவர்களும் இணைத்து கொள்ளவும் ...

  வலைபூ நண்பர்கள் இணைந்தால் disccusion forum கலை கட்டும் ..


  அதற்க்காகவே ஒரு புதிய பக்கம் தொடங்குவதால் .. நண்பர்கள் இணைத்துக்கொண்டால் ,நண்பர்களை பின் தொடரவும் வசதியாக இருக்கும்


  நன்றி
  http://vallinamguna.blogspot.com/

  ReplyDelete